கயப்பாக்ம் ரமேஷ் எழுதிய " இரண்டுக்கு இரண்டு" படித்ததும் சிறுவயதில் அடியேன் 2 ம் வகுப்பில் படிக்கும் போது என் ஆசிரியை ராஜேஸ்வரி அவர்கள், புவியியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வழங்கியது நினைவிற்கு வந்தது.
பானுமதி நாச்சியார் எழுதும்" வள்ளுவத்தில் வியாசர்" தொடரில் சல்லியன் பற்றிப் படித்ததும் கர்ணன் படக் காட்சிகள் கண்முன் விரிந்தன. அத்தோடு நண்பர் பாலகணேஷ் தன் நூலில் குறிப்பிட்ட " சல்லிப்பயல்" மற்றும் அந்தக்காலத்தில் காளையை அடக்குபவருக்கு அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் " சல்லிக்காசுகள்" பரிசாக வழங்கப்படும் என்றும், காளைகளின் கழுத்தில் சல்லியைக் கட்டுவதால், அக்காலத்தில் அது "சல்லிக்கட்டு" எனக் குறிப்பிட்டதும் ஞாபகத்திற்கு வந்தது .
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?