வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி)

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி)



அர்ஜென்டினா சென்று இருக்கும் பிரதமர் மோடிக்கு அந்த நாட்டு அரசு பியூனஸ்

அயர்ஸ் நகர திறவுகோலை வழங்கி கௌரவித்திருக்கிறது.


நமது பிரதமருக்கு வெளிநாட்டில் செல்லும் இடமெல்லாம் மரியாதை கொடி கட்டி பறக்கிறது.

அது நமது நாட்டுக்கு பெருமை. 


தஞ்சை அருகே காசவள நாடு புதூர் என்ற கிராமத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை குறிக்கும் வகையில் மொஹரம் பண்டிகை அன்று அல்லா சாமி ஊர்வலத்தையும் வழிபாட்டையும் அந்த கிராமத்து இந்துக்கள் நடத்துகின்றனர். இந்த கிராமம் எங்கள் ஊருக்கு பக்கத்தில் இருக்கிறது. எங்கள் கிராமமும் 

காசவள நாடு அமைப்பில் இருக்கும் கிராமம்தான்.


தமிழ்நாட்டின் மதசார்பின்மைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. 


தமிழக வெற்றி கழகத்தின்

சிறப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக பிரபல அரசியல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் அறிவித்திருக்கிறார்.


அவர் பீகார் மாநில தேர்தல்களுக்காக பணியாற்றப் போவதாகவும்

அந்த தேர்தல்கள் முடிந்த பிறகு தவெகவின் சிறப்பு ஆலோசகராக பணியாற்றுவதைப் பற்றி முடிவு எடுப்பதாகவும்

கூறியிருக்கிறார்.


அரசியல் கட்சிகளை எல்லாம் தனது வியூகங்களால் வெற்றிப் படிக்கட்டுகளில் தூக்கிவிட்ட

பிரசாந்த் கிஷோர் கடந்த தேர்தல்களில் பீகாரில் மாபெரும் தோல்வியை சந்தித்தார். 


அவரது வியூகம் மற்றவர்களின் கட்சிகளுக்கு வெற்றியைத் தேடித் தருகிறது. ஆனால் 

அவரது சொந்த

அரசியலில் அவரை தோல்வி குழியில் குப்புற தள்ளுகிறது.


இருந்தாலும் தங்களது சாதனைகளால் மக்களை கவர முடியாத அரசியல் கட்சிகள் ஏதாவது சித்து வேலை செய்து பதவியை

பிடித்து விடலாமா என்று அவரை சுற்றி வருகின்றன.


தினம் தினம் அரசின் திட்டங்களை புதிது புதிதாக துவக்கி வைத்து புல்லரித்துப் போகிறார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள். 


அலைகடலென திரண்டு இருக்கும்.கூட்டத்தினரைக் கண்டு புலகாங்கிதமடைந்து

வரப்போகும் தேர்தலில் 

200 ம் நமதே என்று கோஷமிடுகிறார்.


தன்னுடைய விழாவுக்கு வந்திருக்கும் கூட்டம் தானா சேர்ந்த கூட்டமா அல்லது கூட்டி வரப்பட்ட கூட்டமா என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது.


                    


வெ.ஆசைத்தம்பி 

தஞ்சாவூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%