வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 08.09.25

வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 08.09.25



தமிழ் நாடு இ பேப்பரின் வருகை

படைப்பாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவை வாசகர் திரு.

சிவசங்கர் வாசகர் கடிதத்தில் தமிழ் நாடு இ பேப்பரின் சிறப்புகளை பட்டியல் போட்டு பறை சாற்றியது பாராட்டுக் 

குரியது மட்டுமல்ல.

அவையெல்லாம் வெறும் புகழ்ச்சி இல்லை. அத்தனையும் 

அக்மார்க் உண்மை...

உண்மை.


இதனால் தான் தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் சார்பாக வெளிவரும் அருள் தரும் தெய்வம் இதழுக்கு சர்குலேஷன் பலத்தை 

உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற உந்துதல் எங்கள் இருவருக்கும் ஒரு அலைபேசி உரையாடலில் மின்னலாய் பளிச்சிட்டது. மின்னல் வேகத்தில் இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை வாசக உறவுகளிடம் சொல்லி மகிழ்வதில் ஒரு வகை பெருமை இருக்கத் தான் செய்கிறது.


ஊருக்கு உழைத்தல் யோகம் என்பான் மகாகவி பாரதி.

ஊர் என்ன உலக நலனுக்காக ஓயாமல் 

உழைக்கும் தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுவினரின் மகிழ்ச்சி க்காக நாம் உழைப்பதும் மகாகவி 

வழியில் பார்த்தால் யோகம் தானே!


தெய்வம் இதழின் சர்குலேஷனை அதி விரைவாக உயர்த்திக் காட்டுவது ஒன்றும் அவ்வளவு பெரிய கடின வேலை இல்லை.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று உற்சாக குஷியில் நான் சொல்லும் போதும் 

தமிழ் நாடு இ பேப்பரில் நான் எழுதி வரும் வாசகர் கடிதங்களைப் படித்தும் அமெரிக்கா வில் வசிக்கும் என் மகள் ஆரம்பத்தில் கொஞ்சம் ஆச்சரியம் அடைந்தாள். சந்தோஷம் அடைந்தாள். இப்போது அவளுக்கும் இந்த ஆர்வம் தொற்றிக் கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.


இது சம்பந்தமாக நான் துருவித் துருவி இந்த மன மாற்றத்திற்கான காரணம் கேட்டால்,

அவள் ஓப்பனாக இப்படி சொன்னாள்:


" அப்பா... யாருக்கும் லேசுல வராத ஒரு எண்ணம் உங்களுக்கு வந்திருக்கிறது பெரிய விஷயம்... இலவசமாக வாசக பெருமக்களுக்கு தவறாமல் கிடைத்து வரும் இணைய தள 

இதழுக்காக அன்பு பாராட்டி ஆதரவு அளிக்க வேண்டும் என்ற சிந்தனை மெச்சத்தக்கது.

கூடவே அந்த குழுமத்தில் இருந்து வெளிவரும் ஆன்மீக பத்திரிகையின் வளர்ச்சிக்காக எந்த வொரு பிரதிபலனையும் எதிர்பாராது பாடுபடுவது....

உங்களை நினைத்து நான் பெருமைப் படுகிறேன் அப்பா..'

என்று அமெரிக்காவில் இருந்து கொண்டு வீடியோ காலில் உணர்ச்சி ததும்ப அவள் சொல்வதை நினைத்துப் பார்த்தால் 

அவளை நினைத்து எனக்கும் பெருமையாக இருக்கிறது.

புரிந்து கொள்வதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். புரிந்ததோடு நில்லாமல் மனம் திறந்து பாராட்டி சொல்லி மகிழ்வதற்கும் மகிழ்ச்சி படுத்துவதற்கும் பக்குவம் வேண்டும் அல்லவா?


இதையெல்லாம் ஏன் இவ்வளவு விவரித்து வாசக உறவுகளிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்றால், மனித உணர்வுகளின் மகத்துவத்தை மேன்மையை இந்த மாதிரியான அனுபவங்களால் உணர்ந்து புரிந்து நம்மை நாமே செதுக்கிக் கொள்ளலாமே என்று தான்!


ஆகவே அன்பான வாசக சொந்தங்களே!

மீண்டும் மீண்டும் நானும் கோவை வாசகர் திரு.சிவசங்கரும்

தெய்வம் இதழின் சர்குலேஷனை உயர்த்திக் காட்டும் பணியில் சளைக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு கொச்சையான சுயநலம் சார்ந்த காரணம் எதுவும் கிடையாது. ஆனால் சமூகம் சார்ந்த உளவியல் ரீதியிலான 

தார்மீக ரீதியிலான 

தரம் கூடிய அடிப்படை 

காரணம் உண்டு என்பதை தயவு செய்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


இந்த அற்புதமான பேருணர்வை நமது வாசக சொந்தங்கள் அனைவரும் பெற வேண்டும். தமிழ் நாடு இ பேப்பரின் மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் அபூர்வ சத்சங்க சங்கமத்தை பூரணமாக பயன் படுத்தி சமூக தளத்தில் 

மாபெரும் சக்தியாக 

நிலைப் படுத்த வேண்டும்.


ஆறறிவு படைத்த மனிதனால் முடியாதது என்று எதுவும் இல்லை என்பதை வலுவாகவும் 

வளமாகவும் நெஞ்சத்தில் நிலை நிறுத்திக் கொண்டு 

தெய்வம் இதழுக்கு ஆளுக்கு ஒருவர் முதல் 

ஐவர் வரை இலக்கு வைத்துக் கொண்டு 

சந்தாதாரர் எண்ணிக்கையை கூட்டுவோம் இல்லை 

பெருக்குவோம்...

*If not we, Who?*

*If not now, When?*


பி.வெங்கடாசலபதி

தென்காசி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%