01.08.2025
தமிழ் நாடு இ பேப்பரில் தொடர்ந்து கவிதைகளை படைத்து வரும் கவிஞர் பெரு மக்களுக்கு இன்று முதல் மரியாதை!
காரணம் இல்லாமல் இல்லை. அலுவலக லஞ்ச் பிரேக்கில் சக அதிகாரியிடம் நமது இ
பேப்பரின் அட்டகாசம்
பற்றி பேசும் போது
அவரும் என்னைப் போலவே கவிதைப் பக்கங்களின் பெருமை
பற்றி தாராளமாக பேசினார். அவர் சொன்ன இரண்டு விஷயங்கள் என்னை மிகவும் ஈர்த்தன.
கணிசமான எண்ணிக்கை உள்ள கவிஞர்கள் தொடர்ந்து
நல்ல நல்ல கவிதைகளை விதம் விதமாக அள்ளி குவிக்கிறார்கள்.
இப்படி உத்வேகத்துடன் நித்தம் எழுதுவதற்கு
தனித் திறமை வேண்டும். அவர்களை
நிச்சயம் பாராட்ட வேண்டும்.
இன்னொரு விஷயம்...
காட்டாற்று வெள்ளமாய் அவர்கள் கவிதை மழை பொழிவதற்கு தமிழ் நாடு இ பேப்பரும் முக்கிய காரணம்.
எந்தவொரு கட்டுப் பாடும் விதிக்காமல் சுதந்திரமாக அவர்களை எழுத வைத்திருப்பது மிகப் பெரிய வரப்பிரசாதம்.
அச்சு இதழ்கள் கவிதைகளை தயங்கி தயங்கி யோசித்து யோசித்து ஒன்று அல்லது இரண்டு என்று ரேசன் வைத்து
வேண்டா வெறுப்பாக
பிரசுரித்து வரும் இன்றைய சூழலில்
தமிழ் நாடு இ பேப்பர் வெரி வெரி கிரேட்...'
என்று யதார்த்தம் ததும்ப அந்த அதிகாரி
பேசியது கொஞ்சம் என்னை அசைத்தது என்றே சொல்லலாம்.
முதல் மரியாதை கவிஞர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும்
தமிழ் நாடு இ பேப்பர் ஆசிரியருக்குந் தான் என்று சொல்லவும் வேண்டுமா, என்ன...?
அரசியல் செய்திகள்
வரி விடாமல் படிக்கச் சொல்லி தூண்டும் விதமாக இருந்தன.
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று ஓபிஎஸ் கூறுவது ஏஒன் நகை முரண்.
பிரேமலதா விஜயகாந்த் ஸ்டாலினை சந்தித்தது
வியப்பில்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி.
கொள்கைக்கும் கூட்டணிக்கும் இங்கே துளி அளவு கூட சம்பந்தம் இல்லை.
இந்த அரசியல் சூழலில் தான் நமது வாழ்க்கையும் சிக்கி உள்ளது என்று நினைத்தால் தூக்கம் கெட்டு விடும்.
இதையும் கடந்து சென்று வாழ்ந்து காட்ட வேண்டும் என்று சங்கல்பம் எடுத்து இந்த மோசமான அவலச் சூழலை நாம் வென்றெடுக்க வேண்டும்.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் நல்ல நல்ல தகவல்கள் கிடைத்து வருகிறது.
இனி வேர்க்கடலையை
தவறாமல் சாப்பிட வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன்.
மிக்க நன்றி சார்!
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் இதுவரை கேள்விப் பட்டிராத தலைவர்களை வாசக
சொந்தங்களுக்கு அறிமுகப் படுத்தி வரும் ஆசிரியர் குழுவினருக்கு நெஞ்சார்ந்த நன்றி!
சர்தார் சிங்ஜி ராவாஜி ராணா வரலாறு செம ஜோர்!
மன் அழுத்தம் குறைப்போம்.
மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
தொடர்ந்து எங்களை உற்சாகப் படுத்தி வரும் தமிழ் நாடு இ பேப்பருக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் என்ற கவலை மனதின் மூலையில் எட்டிப் பார்ப்பதை தவிர்க்கவே முடியாது!
நாளை சந்திப்போம்!
பி.சிவசங்கர்
கோவை