
தினசரி யாராவது ஒரு வாசகர்
என்னிடம் தொலைபேசியில்
தொடர்பு கொண்டு
உரையாற்றுவார்கள் அவர்கள்
எடுத்த எடுப்பிலேயே தமிழ்நாடு
இ பேப்பர் பற்றி தான் பேசுவார்கள்.
20 பக்கங்கள் வரை என்னிடம்
அலசி ஆராய்வார்கள். அவர்கள்
மன எண்ணத்தை பார்க்கும் போது
தமிழ்நாடு இ பேப்பர் ஒவ்வொரு
வாசகர்களிடம் எவ்வளவு தூரம்
ஆழமாக பதிந்துள்ளது என்பதை
காட்டுகிறது. தமிழ்நாடு இ பேப்பர்
குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்.
27 28 இல் மோடி தமிழகம் வருகிறார்.
பாஜகவின் ஒரு பிரிவாக தேர்தல்
ஆணையம் செயல்படுவதாக
குற்றச்சாட்டு. கேரளாவில் நிபா
வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
கோவை குற்றாலம் மீண்டும்
திறக்கப்பட்டது. தமிழகத்தில்
ஏழு லட்சம் வீடுகளுக்கு ரேஷன்
பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட்டது
மதிவாணன் அவர்கள் எழுதிய
நல்ல மனம் வாழ்க என்ற கதை
மிகவும் அருமையாக இருந்தது.
நடிகர் கிங் காங் வீட்டு திருமணத்தில்
முதல்வர் கலந்து கொண்டது அவர்
பெரும் தன்மையை காட்டுகிறது.
தமிழ்நாடு இ பேப்பர் மூன்றாம் ஆண்டு
தொடக்க விழா பற்றிய கடிதங்கள்
அனைத்தும் புல்லரிக்க வைக்கிறது.
கிச்சன் சமையல் பகுதியில்
பீட்ரூட் வடை பிரமாதம். பாமகவுக்கு
நான் தான் தலைவர் என ராமதாஸ்
தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்
அனுப்பியுள்ளார். அவசர நிலை
ஒரு கருப்பு அத்தியாயம் என
சசி தரூர் கூறியுள்ளார். அமெரிக்கா
பிரேசிலுக்கு 50% வரியும்
மற்ற ஏழு நாடுகளுக்கு 30%
வரியும் விதித்துள்ளது.
வாசகர்கள் அனைவரும் மனதிலும்
நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும்
தமிழ்நாடு இ பேப்பர் க்கு
வாழ்த்துக்கள்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?