அன்புடையீர்
வணக்கம். 1.8.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர். காம் முதல் பக்கத்தில் பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் அவர்கள் விலகினார் என்ற செய்தி அரசியலில் நடக்கும் செய்திகளை மிக அழகாக துல்லியமாகவும் சொன்னது. இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புத நாளாக அமைய எனக்கு உதவி நிறைந்த பாராட்டுக்கள்.
ஸ்ரீ வீரனார் கோவிலில் குடமுழுக்கு விழா என்ற செய்தி அங்கு சென்று நேரில் பார்ப்பது போல ஒரு மனத் தெளிவை கொடுத்தது. மனம் நிறைந்த பாராட்டுக்கள். 48 ஆம் நாள் மண்டல பூஜை நடக்கும் மதுரை அலங்காநல்லூர் அருகே குறவன் குளம் கிராமத்தில் முத்தாலம்மன் பகவதி அம்மன் பற்றிய செய்தி மிகவும் அருமை பாராட்டுக்கள்.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் உடலில் உள்ள கொழுப்பினை குறைக்க தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடலாம் என்ற செய்தி இன்பத்தேனாக காதுகளில் விழுந்து என்னை பரவசப்படுத்தியது. மாநகராட்சி கழிவறை பராமரிப்பு செலவுக்காக ரூபாய் ஆயிரம் கோடியா என்று நயினார் நாகேந்திரன் அவர்கள் கண்டனம் தெரிவித்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது.
சென்னையில் தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் செய்தது உண்மைதான். நாய்கள் சாலைகளில் நடமாடும் போது ஒரு வித பயத்துடன் நடக்க வேண்டியுள்ளது தான் உண்மை.. கடைகள் உரிமம் தொடர்பாக ஆய்வு செய்ய கூற அமைத்தது மிகவும் நல்ல செய்தி பாராட்டுக்கள்.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வந்த சர்தார்சிங்ஜி ராவாஜி ராணா என்ற செய்தியும் அவர்கள் பற்றிய வரலாறும் புகைப்படம் மிகவும் அருமை மானம் நிறைந்த பாராட்டுக்கள்.
பல்சுவை களஞ்சியம் பகுதி நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டிருப்பது தான் உண்மை. மீம்ஸ் விடுகதை ஜோக்ஸ் எல்லாமே மிகவும் அற்புதம் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
தெய்வீக அருள் தரும் ஆன்மிகம் என்று நினைத்தது நிறைவேறும் என்ற செய்தியும் அம்மன் புகைப்படமும் வரத்தை தரும் அம்மன் என்ற அருமையான செய்திகளையும் வெள்ளிக்கிழமையன்று படிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் கடவுளை கும்பிட வைத்தது.
நீலாயதாட்சி அம்மன் கோவில் தெப்ப உற்சவம் மிகவும் அற்புதம். கண்களிலேயே ஆனந்தத்தை கொண்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக படிக்க வைத்தது. 135 மாணவ மாணவியர்களுக்கும் மடிக்கணிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்கினார் என்ற செய்தி அவர் உடல் நலமுடன் இருக்கிறார் என்று புரிய வைத்தது.
சுற்றுலா பகுதியில் இன்று மூன்றாவது பாகமாக சென்னையில் இருந்து வார இறுதியில் பயணங்களை பார்க்க வேண்டிய இடங்களை அழகாக பட்டியலிட்டது மிகவும் அற்புதம்.. இதுபோன்ற நல்ல செய்திகளை கொடுப்பதால் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கும் என்பது உண்மை ஆகஸ்ட் மாத ராசி பலன் மிகவும் அற்புதம். இந்த மாதம் எப்படி இருக்கும் என்று நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.
அதிர்ச்சியான செய்திகளை க்ரைம் கார்னரில் படித்தாலும் ஒரு விழிப்புணர்வு தருவது உண்மை.
மத்திய அரசு திட்டத்திற்கு ரூபாய் 140 கோடி மோசம் செய்த தந்தை மகன் கைது என்று செய்தி அதிர்ச்சியாக இருந்தது. இதுபோல கூட ஏமாற்ற முடியுமா என்ற ஒரு திகிலை தந்தது அந்த செய்தி .
சிட்னியில் விண்ணில் உயர்வு ஏவப்பட்ட 14 வினாடிகளில் வெடித்து சிதறிய ராக்கெட் என்ற செய்தி அதிர்ச்சியுடன் படிக்க வைத்தது. பிரேசிலுக்கு 50 சதவீத வரி விதிப்பு என்ற அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அவர்களின் உத்தரவு படித்து அயல்நாட்டு செய்திகளையும் மிக அருமையாக தெரிந்து கொள்ள முடிந்தது.
வெள்ளி முளைக்கும் போது மிக அருமையாக நல்ல செய்திகளை சொல்லி எங்களை உற்சாகத்துடன் வெள்ளிக்கிழமை விடியலை தொடங்க உதவிய தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி
உஷா முத்துராமன்