வாக்காளர்களை நீக்கிவிட்டு வாக்குச்சாவடிகளை உயர்த்துவதா? ஆர்.எஸ்.பாரதி கேள்வி

வாக்காளர்களை நீக்கிவிட்டு வாக்குச்சாவடிகளை உயர்த்துவதா? ஆர்.எஸ்.பாரதி கேள்வி

 வாக்காளர்களை நீக்கிவிட்டு வாக்குச்சாவடிகளை உயர்த்துவது ஏன் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தமிழகத்தில் 10 சதவீத வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68,467 ஆக இருந்த நிலையில் 75,035 ஆக அதிகரித்துள்ளது. அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்கா மல் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் ஆணையம் உயர்த்தியது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். “திமுகவின் கடுமையான முயற்சியால் வாக்காளர் பட்டிய லில் பெரும்பாலானோர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் நாட்டில் டிசம்பர் 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதாகவும் அவர் கூறினார். சுமார் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், எந்த அளவுக்கு உண்மை என்பது பட்டியல் வெளியீட்டிற்குப் பிறகே தெரியும் என்றும், தகுதியான வாக்காளர்களை மீண்டும் சேர்க்கும் பணியில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலின்போது அமித் ஷா 8 முறை தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆனால் திமுக வெற்றி 39-இல் இருந்து 40 ஆக அதிகரித்ததே தவிர, குறையவில்லை” என்றும் அவர் கூறி னார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%