மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும்: முதலமைச்சர்

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும்: முதலமைச்சர்

மகளிர் உரிமைத் தொகைக்கான பட்டியலில் விடுபட்ட வர்களான கூடுதல் 17 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை கிடைக்கும் வகையிலான இரண்டாம் கட்ட விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். ‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ என்ற பெயரில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் ஒன்றிணைந்து, தங்களின் வெற்றிக் கதைகளை யும் பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு செய்து வரும் முன்னெடுப்புகள் குறித்தும் புகழ்ந்து பேசினர். நிகழ்ச்சியில் ஐபிஎஸ், ஐஏஎஸ், ஐஎஃஎஸ் அதிகாரிகள், காவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் மேடையில் ஏற்றி கவுரவிக்கப்பட்டனர். மேலும் அரசின் திட்டத்தால் பயனடைந்த பெண்கள் தங்களது அனுப வங்களை பகிர்ந்து கொண்டனர். 101 வயதான சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் ஆகியோ ருக்கு தமிழக அரசு சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தலைநிமி ரும் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்ந்து நடைபோட, நிச்சயம் உரிமைத்தொகை உயரும்” என்றார். துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பெண்ணுரிமையில் இந்தியா விற்கே தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது” என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%