வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர விழா

வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர விழா

வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர விழாவில் ஊஞ்சல் உற்சவம் மற்றும் வளையல் அலங்காரம் நடைபெற்றது.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர விழாவில் காலையில் அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு 7- மணிக்கு உண்ணாமுலையம்மன் வளையல் அலங்காரத்தில் ஊஞ்சலில் காட்சி அளித்தார். பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் கே. நடராஜன், ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் நற்பணி மன்ற அறக்கட்டளையினர் சிறப்பாக செய்திருந்தனர். இவ்வாலயத்தில் வருகின்ற ஆகஸ்ட் முதல் தேதி மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று 28- ஆண்டு 108 திருவிளக்கு பூஜை விழா நடைபெறுகிறது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%