வலங்கைமான் அருகே உள்ள மணலூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது
Aug 31 2025
20

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் மணலூர் ஊராட்சியில், மணலூர், மதகரம், மாளிகைதிடல், ஏரி வேலூர் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட பொது மக்கள் பல்வேறு துறை தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்தனர். கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை கோரி 100 க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அமுதா, வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன், வலங்கைமான் வட்டாட்சியர் ஓம் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, சிவக்குமார், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் தேவகி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?