ரவா கேசரி

ரவா கேசரி

தேவையான பொருட்கள்:


பொருள் - அளவு


ரவை2 கப்


சர்க்கரை2 கப்


தண்ணீர்4 கப்


நெய்அரை கப்


முந்திரிப் பருப்பு10


ஏலக்காய்4


கேசரி பவுடர்1 டீஸ்பூன்


பன்னீர்2 டீஸ்பூன்


செய்முறை :


  முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஏலக்காயை தூள் செய்து கொள்ள வேண்டும். நெய்யை உருக்கிக் கொள்ள வேண்டும்.


  அடுப்பில் கடாயை வைத்து சிறிது நெய் ஊற்றி நறுக்கிய முந்திரியை பொன் நிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதே நெய்யில் ரவையைக் கொட்டி நன்றாக வறுக்க வேண்டும்.


  தண்ணீரைக் கொதிக்க வைத்து வறுத்த ரவையில் ஊற்றி, கட்டியாகாமல் நன்றாகக் கிளற வேண்டும். ரவை நன்றாக வெந்ததும், சர்க்கரையை சேர்த்துக் கிளற வேண்டும்.


  கேசரி பவுடரை தண்ணீரில் கரைத்து ஊற்றி பன்னீரையும் சேர்க்க வேண்டும்.


  உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக கேசரியில் ஊற்றிக் கிளறிக் கொண்டே வர வேண்டும். வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காயைச் சேர்த்துக் கிளற வேண்டும்.


பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி விட வேண்டும்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%