ரஜினியின் கூலி படத்துக்கு யு/ஏ சான்று கோரிய வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி
Aug 30 2025
11

சென்னை, ஆக. 28–
நடிகர் ரஜினி நடித்து வெளியாகியுள்ள கூலி திரைப்படத்துக்கு யு/ஏ சான்று வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான 'கூலி' திரைப்படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், 18 வயதுக்கு கீழானவர்கள், பெண்கள் குழந்தைகளுடன் கூலி படத்தை பார்க்க முடியவில்லை என்பதால், படத்துக்கு யு/ஏ சான்று வழங்க, சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு விசாரணை, நீதிபதி தமிழ்ச்செல்வி முன் நடைபெற்று வந்தது. சன் பிக்சர்ஸ் தரப்பில், எந்த தமிழ் படங்களிலும் அதிகப்படியான சண்டைக் காட்சிகள் இல்லாத படங்களை பார்க்க முடியாது. மோசமான வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. மது காட்சிகள் மறைக்கப்பட்டுள்ளன. சென்சார் போர்டு தெரிவித்த நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளன என வாதிடப்பட்டிருந்தது. சென்சார் போர்டு தரப்பில், 'ஏ' சான்றிதழை முதலில் ஏற்றுக் கொண்ட படக்குழு தற்போது யு/ஏ சான்றிதழ் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளது. படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்குவது தொடர்பாக அனைத்து குழுக்களும் சேர்ந்து ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. வன்முறைக் காட்சிகளை நீக்கி விட்டு, யு/ஏ சான்று கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில் கூலி திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கோரி சன் பிக்சர்ஸ் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. அதிக அளவிலான சண்டைக் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் மற்றும் மோசமான வார்த்தைகள் உள்ளதால், குழந்தைகள் அப்படத்தை பார்ப்பதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?