சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் தொழில்நுட்பக் கோளாறு: டிக்கெட் எடுப்பதில் சிக்கல்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் தொழில்நுட்பக் கோளாறு: டிக்கெட் எடுப்பதில் சிக்கல்

சென்னை, ஆக. 28–


சென்னை மெட்ரோ ரெயிலில் நாள்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயிலுக்கான டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறுவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.


இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாட்ஸ்அப் சாட்பாட் தற்காலிகமாக வேலை செய்யவில்லை. எனவே, அனைத்து பயணிகளும் சென்னை மெட்ரோ மொபைல் செயலி, பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை அட்டை மற்றும் சென்னை மெட்ரோ பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


சிரமத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன வருந்துகிறது. மேலும் தகவல் வரும் வரை பயணிகள் கவுண்டரிலும் டிக்கெட்டுகளைப் பெறலாம். தகவல்கள் விரைவில் புதுப்பிக்கப்படும்.”


இவ்வறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%