பொறியியல் கலந்தாய்வு: கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை! 81% மாணவ சேர்க்கை!

பொறியியல் கலந்தாய்வு: கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை! 81% மாணவ சேர்க்கை!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 1.72 லட்சம் பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்களில் 80.29 சதவீத இடங்கள் அதாவது நிரம்பியிருக்கின்றன.


கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் 10 சதவீதம் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.


தமிழகத்தில் மொத்தமுள்ள 423 கல்லூரிகைளில் 1,72,589 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. இதில், கலந்தாய்வு மூலம் 1,38,573 இடங்கள் நிரம்பின . 34,016 இடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஆண்டு 71 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியிருந்தன.


கடந்த 2015ஆம் ஆண்டில் 1.93 லட்சம் மாணவர் ச்ரக்கை இடங்களில் 90,000 இடங்கள் காலியாகவே இருந்தன. அது முதலே, ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேர்க்கை இடங்கள் காலியாகவே விடப்பட்டிருந்தன. ஆனால், இந்த ஆண்டு மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் ஆர்வத்துடன் சேர்ந்தனர் என்று அண்ணா பல்கலை பேராசிரியர் கூறியிருக்கிறார்.


பல கல்லூரிகளில் வளாகத் தேர்வுகள், புதிய வளர்ந்துவரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்றபடி தேவை அதிகரிக்கும்எ ன எதிர்பார்ப்பு போன்றவை, வணிகம் மற்றும் அறிவியல் பாடங்களைத் தாண்டி மாணவர்களை பொறியியல் படிப்புகளில் சேர வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


வழக்கமான நிலையைக் காட்டிலும் இந்த ஆண்டு அடிப்படைப் படிப்புகளான சிவில் மற்றும் மெக்கானிக்கல் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு 70 சதவீத மாணவர்கள் கோர் படிப்புகளில்தான் சேர்ந்திருக்கிறார்கள்.


57 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முழுமையாக நிறைவு பெற்றிருக்கிறது. 184 கல்லூரிகளில் 90 சதவீதம் நிரம்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.


இந்த ஆண்டு டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி, இன்டஸ்டிரியல் பொறியியல், மரைன் பொறியியல் உள்ளிட்டவற்றில் குறைவான சேர்க்கை நடந்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%