மொழிக்காக உயிரையும் தந்த தியாக மறவர்களை கொண்ட இயக்கம் திமுக’’

மொழிக்காக உயிரையும் தந்த தியாக மறவர்களை கொண்ட இயக்கம் திமுக’’

மொழிக்காக உயிரையும் தந்த தியாக மறவர்களை கொண்ட இயக்கம் திமுக’’ 

- முதல்வர் ஸ்டாலின் அயலக தமிழர் தின விழாவில் பேச்சு!

 

சென்னை: “மொழிக்காக போராடிய இயக்கம் மட்டுமல்ல, மொழியுரிமை காக்க தங்கள் உயிரையே தந்த தியாக மறவர்களைக் கொண்ட இயக்கம் திமுக” என அயலக தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற “அயலகத் தமிழர் தினம் – 2026” விழாவில், அயலகத் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார். பின்னர் அவர் பேசியபோது, “ நூற்றாண்டுகளுக்கு முன் தங்களின் தாய்மண்ணான தமிழ்நாட்டில் இருந்து, பல்வேறு காரணங்களுக்காக, வாய்ப்புகளுக்காக பறந்து சென்றவர்கள் உங்கள் முன்னோர்கள்.


அவர்களை வாழ்க்கை தேடிப் சென்றவர்கள் என்று சொல்வதைவிட, அந்தந்த நாடுகளை வளப்படுத்த சென்றவர்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு நன்மை செய்வதை போலவே, அயல்நாட்டுத் தமிழர்களுக்கும் சகோதரனாக இருந்து நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டு வருகிறது.


உங்களுக்காகவே அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறது. வேறு நாட்டில் செட்டிலான சிட்டிசனாக இருந்தாலும், அயலகத்தில் உழைக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும், நீங்கள் எந்த குறையும் இல்லாமல் வளமாய் வாழ வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.


* நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, 'அயலகத் தமிழர் நல வாரியம்' என்று 15 உறுப்பினர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்தோம்.


* ஜனவரி 12 அயலகத் தமிழர் நாளாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தமிழால் இணைவோம், உலகெங்கும் தமிழ், தமிழ் வெல்லும் என்று கருத்தரங்குகள் நடத்தப்பட்டிருக்கிறது.


* தமிழ்நாட்டில் 105 முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்காக, 7 ஆயிரத்து 469 வீடுகள் கட்டித்தர திட்டமிட்டு, படிப்படியாக கட்டப்பட்டு வழங்கிக் கொண்டிருக்கிறோம்.


* வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக கட்டணமில்லா உதவி மையம் துவக்கப்பட்டிருக்கிறது.


* “தமிழ் வேர்களைத் தேடி பயணம்” மூலமாக உங்களை எல்லாம் தமிழ்நாட்டிற்கு அழைத்துக் கொண்டு வருகிறோம்.


* புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் சொந்த ஊர்களை மேம்படுத்தும் ‘எனது கிராமம்’ திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது.


* அயல்நாடுகளில் வேலைக்குச் சென்று அங்கு இறக்க நேரிடும் வாரிய உறுப்பினர் குடும்பத்திற்கு மாதந்தோறும் நிதியுதவி அளிக்கும் திட்டம் அமலில் இருக்கிறது.


* உக்ரைன், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர், இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்து மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில், 2 ஆயிரத்து 398 தமிழர்களை அயல்நாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம்.


* தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும், தமிழ்மொழி வளர்ச்சிக்காக பல திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்காகவே, தமிழ்ப் பரப்புரைக் கழகம் என்ற ஒரு அமைப்பைச் செயல்பட வைத்திருக்கிறோம்.


* புலம் பெயர்ந்த மண்ணில் தமிழுக்காகப் பாடுபடும் தமிழ்ச் சங்கங்களுக்கு விருதுகள் மற்றும் அங்கீகாரம் அளிக்கிறோம். கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், வணிகம் ஆகிய துறைகளில் சாதனை படைக்கும் அயலகத் தமிழர்களைத் தேர்ந்தெடுத்து, கணியன் பூங்குன்றனார் விருது வழங்கிக் கொண்டிருக்கிறோம்.


* அயலகத்தமிழர்களில் பன்முகத்தன்மையோடு விளங்கும் ஒரு தமிழரைத் தேர்ந்தெடுத்து, “தமிழ்மாமணி” விருதும், பட்டயமும் வழங்கியிருக்கிறோம்.


* அயல்நாட்டுத்தமிழர்கள் மற்றும் தமிழ்ச் சங்கங்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உறவுப் பாலமாக செயலாற்றும் அயலகத் தமிழ் இளைஞர் ஒருவருக்கு “சிறந்த பண்பாட்டுத் தூதுவர்” விருதையும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.


உங்களை பாராட்ட வேண்டும் என்று மட்டுமல்ல, உங்களுடன் இருக்கும் உறவு தொடர வேண்டும் என்றுதான் இதையெல்லாம் செய்கிறோம். வாழ்வதும் வளர்வதும் தமிழும் தமிழினமுமாய் இருக்க வேண்டும் என்று செயல்படும் அரசு நம்முடைய அரசு.


தமிழ் என்னும் உலக மொழிக்கு சொந்தக்காரர்கள் நாம். தமிழ்தான் நம்மை ஒற்றுமைப்படுத்தும். சாதி வேற்றுமைகளையும், மத வேறுபாடுகளையும் வீழ்த்தி அனைவரையும் ஒன்றாக்கும் வல்லமை தமிழ் மொழிக்கு மட்டும்தான் உண்டு. வாழும் நாடுகளால் நாம் பிரிந்திருந்தாலும், மொழி நம்மை இணைத்துவிடுகிறது. வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று திராவிட இயக்கம் தமிழ் மண்ணில் விதைத்தது. அதனால்தான், இந்திய மாநிலங்களிலேயே தனித்தன்மை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு வளர முடிந்தது.


மொழிக்காக போராடிய இயக்கம் மட்டுமல்ல, மொழியுரிமை காக்க தங்கள் உயிரையே தந்த தியாக மறவர்களைக் கொண்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். மொழிப்பற்றும், இனப்பற்றும்தான் நமக்கு உண்டு. அது மொழிவெறியாக, இனவெறியாக நாம் எப்போதும் மாறமாட்டோம். நமக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழ வேண்டும். உங்களின் கல்வியும், அறிவும்தான் உங்களை காக்கும்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%