முனுகப்பட்டு அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் கோவிலில் இன்று பிற்பகல் நடை அடைப்பு:

செய்யாறு செப். 7,
செய்யாறு அடுத்த முனுக்கப்பட்டு அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் கோயிலின் நடை பிற்பகலில் சாத்தப்படுகிறது, மேலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் வானில் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இன்று இரவு 10 மணிக்கு வானில் 'சந்திர கிரகணம்' ஏற்படுகிறது. இன்று நள்ளிரவு 12 மணி வரை இந்த 'சந்திர கிரகணம்' தொடர்கிறது. இதனால், பக்தர்கள் வெளியில் வரக்கூடாது அவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படக்கூடாது என்கின்ற வகையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இன்று பிற்பகல் 1:30 மணி முதல் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.மறுநாள் 8ம் தேதி திங்கட்கிழமை கோவில் வழக்கம் போல் திறந்து, பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்கள் என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?