பிரம்மபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் : பொதுமக்கள் திரளாக பங்கேற்பு!

பிரம்மபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் : பொதுமக்கள் திரளாக பங்கேற்பு!


 வேலூர், செப். 7-

 வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர்.

 பிரம்மபுரத்தில் ஒன்று , இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு ஆகிய வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. பிரம்மபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பிரம்மபுரம் ஊராட்சி, காட்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதி திராவிட நல நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் காலை முதல் மாலை வரை நடந்தது. இதில் வருவாய் துறை, மருத்துவ துறை, கால்நடைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. பிரம்மபுரம் பகுதியைச் சேர்ந்த 1 முதல் 6 வார்டுகளைச் சார்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து பல்வேறு வகையான பணிகளை அந்த தளத்திலேயே முடித்துக்கொண்டு சென்றனர். பல்வேறு கோரிக்கை மனுக்களும் பொதுமக்கள் சார்பில் இந்த முகாமில் அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த முகாமில் பிரம்மபுரம் கிராம நிர்வாக அலுவலர் ரேகா பங்கேற்கவில்லை. இதற்கு காரணமாக அவர் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த முகாமில் காட்பாடி துணை வட்டாட்சியர் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று உங்களுடன் ஸ்டாலின் முகாமை சிறப்பித்தனர். முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிரம்மபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%