முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதனார்

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதனார்


நேரிசை வெண்பா!


முத்தமிழ்க்

   காவலர்

    மூத்த

     தமிழறிஞர்

வித்தகர்

  வீறுகொண்டே

    போற்றிடும்...

      சித்த

மருத்துவர்

  மாண்பின்

     இதழாசான்

        என்றும்

அருமை

   *கிஆபெ* வே

       ஆம்!


*உணவே*

    *மருந்து*

       *மருந்தே*

           *உணவு*

மணந்திடும்

  சொற்றொடரின்

    மாண்பு..

      கனிந்திடும்

கண்டு

  பிடிப்பாளர்

    காண்கி

     ஆபெவே

பண்டுவம்

  போக்கிடுவார்

     பார்!



ஐந்தா

  யிரம்சீர்

   திருத்த

     அழகான

பைந்தமிழ்க்

   கல்யாணம்

     பாங்காக...

       நைந்திடாமல்

செய்தாரே

  *கலைமா*

       *மணிகிஆபெ*

           சீர்மையுடன்

நெய்தார்

    தமிழையே

      நேர்ந்து!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%