(தான் பிறந்த கட்டிலில் இருந்து.. தனக்கு குருதி கொடுத்த எஜமானின் மரணத்தின் போது.. அழுதுபாடிய ஒரு மூட்டைப் பூச்சியின் முகாரி இது. )
*******************
ஐயகோ! எஜமானரே.. அதிகாலை சென்றீரே.. எமைவிட்டுப் பிரிந்தீரே
சிவலோகம் சென்றீரோ
கட்டிலெனும் தொட்டிலிலே
கண்மூடிப் தூங்கயிலே புட்டிப்பால் தந்தவரே.. புதுரத்தம் ஈந்தவரே..
இடுக்கில் நானிருந்தபடி
இடுப்பில் கடித்தாலும்
தடுக்காமல் இருந்தவரே
தன்னுதிரம் தந்தவரே..
புள்ளைக்குட்டியுடன்
இட்டப்படி இரவெல்லாம்
சுற்றித் திரிகயிலும்
சொல்லாமல் போனவரே!
தேர்யேறி போனீரே..
தேம்பியழ வைத்தவரே! நானேறி ஊறயிலே.. நறுக்கென்று கடிகயிலும்
அடிக்காமல் விட்டவரே.. ஆதரித்து குருதிதந்த
அன்புக்கு உரியவரே..
நசுக்காத நாயகரே..
முல்லைக்கு தேர்
கொடுத்தான்!
மயிலுக்கு போர்வை தந்தான்!
மூட்டைக்குக் குருதிதந்தீர்
எங்களது வள்ளல் நீரே..
இனிமேல் இக்கட்டில்
எவர்வந்து படுப்பாரோ?
அவர் ரத்தம் குடித்துயான்
எப்படித்தான் வாழ்வேனோ?
புள்ளைக் குட்டியெல்லாம்
புலம்பித் தவிக்கிறதே..
மேலோகம் சென்றவரே
மேன்மைமிகு எஜமானரே
சிவலோகம் வைகுண்டம்
எங்குசென்றீர்? என் எஜமானரே.. இன்னொரு பிறவியிலே தாயாக பிறப்பேனோ?
தாலாட்டு படிப்பேனோ..
மூட்டைப் பூச்சிஎந்தன்
முகாரி இராகம் கேட்டு..
மீண்டும் பிறப்பீரோ..
கட்டிலிலே காத்திருப்பேன்!
*வே.கல்யாண்குமார்*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?