கலம் ஏற்றி.. கடல்கடந்து என்தமிழர் விற்று வந்தார்.. மிளகோ மிளகு!
நலம் காக்கும் நல் மருந்தாய்.. நற்றமிழர் போற்றி வந்தார்.. மிளகோ மிளகு!
பொங்கல் வடைக் ரசத்தில்.. மிளகாய் பொடி ருசியில்.. தங்கம் போல் சேரத்தார் மிளகோ மிளகு!
தாரம் வெறுத்தாலும் காரம் வெறுக்காதே.. தாரம் போல் நலம் பேண சேர்த்துக்கொள் மிளகோ மிளகு!
ஊரார் பழித்தாலும் உணவில் விடம் கலந்தாலும் நாலு மிளகினை சேர்த்து உண்டால் கவலை தீர்க்கும் மிளகோ மிளகு!
உளநாள் மட்டும் உணவில் மிளகிருந்தால்.. பல்லாண்டு வாழவே பாதைகாட்டும் மிளகோ மிளகு!
*வே.கல்யாண்குமார்.*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%