மாவீரர் அழகுமுத்துக்கோன் 265-வது குருபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது
Jul 11 2025
32

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தந்தை பெரியார் நகரில் மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் 268 வது குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு யாதவ இளைஞர் அணி மாவட்ட செயலாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். இதில் தொழிலதிபரும், தாஜ்புரா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சேட்டு, வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் பொன்.கு.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி சிறப்பித்தனர். இதில் அதிமுக நகர செயலாளர் ஜிம். சங்கர், ஆட்டோ கண்ணன், சித்தீஸ்வரர் கல்லூரி தாளாளர் தரணிபதி, ஜிஜிஆர். கோகுல், துளசிராமன், ஜி.கே. முரளி, மதிமுக மாவட்ட செயலாளர் பி.என். உதயகுமார், தவெக ஆற்காடு நகர செயலாளர் பி. வினோத் மற்றும் ஆற்காடு நகர முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?