சென்னை, ஜன. மாதவரம் மற்றும் மணலியில் படகு குழாம் உள்ளிட்ட ரூ.39.78 கோடி மதிப்பிலான திட்டங்களை அமைச்சர் கே.என்.நேரு செவ்வாயன்று (ஜன.13)தொடங்கி வைத்தார். தமிழக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , வட சென்னைக்கு உட்பட்ட மாதவரம், மணலி மற்றும் திருவொற்றியூர் மண்ட லங்களில் மொத்தம் 39.78 கோடி ரூபாய் மதிப்பிலான 5 முக்கிய வளர்ச்சித் திட்டங்களை செவ்வாயன்று தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, மாத வரம் ஏரியில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டி லும், மணலி ஏரியில் 10.41 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்கப் பட்டுள்ள புதிய படகு குழாம்களை அவர் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, நேரில் படகு சவாரி மேற்கொண்டு வசதிகளை ஆய்வு செய்தார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் இந்த இரு ஏரி களிலும் சேர்த்து 33 புதிய படகுகள் (மிதி படகுகள், மோட்டார் படகுகள் மற்றும் ஜெட்ஸ்கி ஸ்கூட்டர்கள்) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடப்பட்டுள்ளன. புனரமைக்கப்பட்ட இந்த ஏரிகளில் நடைபாதை, பசுமைப் பூங்கா, சிறுவர் விளையாட்டு உப கரணங்கள், உணவகம் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, ஏரிகளின் நீர் கொள்ளளவும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மணலி பாடசாலை தெருவில் ரூ.4.75 கோடி மதிப்பீட்டில், தாய்மார்கள் பாலூட்டும் அறை மற்றும் கடைகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையத்திற்கும், மணலி புதுநகரில் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் நவீன சமுதாயக் கூடம் கட்டும் பணிக்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?