
சென்னை:
தமிழக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக மருத்துவர் சுகந்தி ராஜகுமாரி நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் செந்தில்குமார் இதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு சூரங்குடி கிரா மத்தைச் சேர்ந்த மருத்துவர் சுகந்தி ராஜகுமாரி, 36 ஆண்டு களாக மருத்துவக் கல்வி பணியில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தோல் மருத்துவத் துறையில் பேராசிரியர் மற்றும் துறை தலைவராக பணி யாற்றிய அவர், 2019இல் பதவி உயர்வு பெற்று கன்னி யாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வரானார். முன்னதாக, மரு. சங்குமணி ஜூன் 30ஆம் தேதி யுடன் ஓய்வு பெற்றதையடுத்து, கூடுதல் இயக்குநர் தேரணிராஜன் பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டிருந் தார். இரண்டு மாதங்கள் கடந்த பின்னர், இப்போது சுகந்தி ராஜகுமாரி முழுமையான இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?