
சென்னை:
தமிழக முதலமைச்சர் கடந்த ஏப்ரல் 29 அன்று நடைபெற்ற 2025-2026-க்கான பட்ஜெட் கூட்டத் தொடரில், 1859 ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6 ஆம் தேதி ஆண்டுதோறும் காவலர் நாளாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார். அதன்படி, தமிழ்நாட்டில் முதன் முறையாக காவலர் நாள் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை தலை மையகம், சென்னையில் தமிழ்நாடு காவல்துறையின் வரலாறு குறித்த சிறப்புத் திரையிடலுடன் கொண்டாட்டங் கள் தொடங்கின. 2023 ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயல் பட்டதற்காக, தமிழ்நாடு காவல்துறையின் ஒவ்வொரு மாவட்டம், நகரம், பெருநகர சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 46 சிறந்த காவல் நிலையங்களின் காவல் நிலைய அதிகாரிகளுக்கு, தமிழக டிஜிபி வெங்கட்ராமன் தமிழக முதல்வரின் விருதுகளை வழங்கினார். டிஜிபி வெங்கட்ராமன் காவலர் நாளின் முக்கியத்து வத்தை அடிக்கோடிட்டுக் காட்டி, காவல் படையினர் கடமை, மரியாதை மற்றும் சேவையின் லட்சியங்களுக்கு தங்களை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என வலி யுறுத்தினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?