அன்னம் தரும் அமுதக்கரங்கள்" 200வது நாள் : அமைச்சர் ராஜகண்ணப்பன் உணவு வழங்கினார்
சென்னை, செப். 7–
அமைமச்சர் பி.கே. சேகர்பாபு ஏற்பாட்டில் "அன்னம் தரும் அமுதக்கரங்கள்" வெற்றிகரமாக தொடர்ந்து 200வது நாளான இன்று சிறப்பு அழைப்பாளராக வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு கொளத்தூர் பகுதியில் பொதுமக்களுக்குகாலை உணவு வழங்கினார்.
“பசி வந்தவுடனே வயிறு நிரம்ப உணவளிக்கும் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.” என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்” – அதில் எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் நம்பும் கோட்பாடு, “ஒவ்வொருவரிடமும் அஞ்சாமல் நேரடியாக உரையாடுவோம்” என்பதுதான். அதுவே நம் தலைவர் தளபதியின் பாலிசி.’ என்றார்.
இந்த திட்டம் முதலமைச்சரின் மக்களுக்கான அக்கறையிலிருந்து பிறந்தது. தற்போது தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நான் பல இடங்களில் ‘200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி!’ என்ற வாசகங்களைப் பார்த்தேன். உண்மையிலேயே, வெற்றியைப் பெறுவோம்! ஆனால் எளிமைக்காக ‘இருநூறு தொகுதிகள்’ என நாம் குறிப்பிடுகிறோம் என்றும் கூறினார்.
விஜயகாந்தும் – விஜய்யும்
இந்த இயக்கம் பெரியாரும், அண்ணாவும், தலைவர் கலைஞரும் வழிகாட்டியாக இருந்த திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி. இன்று சிலர் தனியாக அரசியலுக்கு வரலாம் – விஜய் போன்றவர்கள். ஆனால் அவர்களால் உண்மையான மாற்றத்தை கொண்டு வர முடியாது. எம்ஜிஆர் கூட 30 ஆண்டுகள் திமுகவில் இருந்த பின்னரே அரசியல் பயணத்தில் வெற்றி பெற்றார். விஜயகாந்த் ஒரு நேரத்தில் 25 லட்சம் பேருடன் மாநாடு நடத்தினார், பிறகு 15 லட்சம் பேருடன். ஆனால் இதை பெரிதாகக் கருத வேண்டாம். அந்தக் கூட்டத்தில் 10, 12, 13 வயதுடைய சிறுவர்கள் ஓட்டு போடத் தெரியாதவர்கள் – அவர்கள் வந்தது வெறும் சினிமா பிரபலம் காரணமாகத்தான் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், பகுதி செயலாளர்கள் எ.நாகராஜன், ஐசிஎப். முரளிதரன், கூ.பீ. ஜெயின், வே.வாசு, டி.எஸ். பி.ராஜகோபால், எம்.டி.ஆர்.நாகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பி.கே.மூர்த்தி கே.சந்துரு, மகேஷ்குமார், மண்டலக் குழுத்தலைவர்கள் திருமதி.சரிதா மகேஷ்குமார், ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் டாக்டர்.ஜி. சாந்தகுமாரி, டாக்டர். ஏ.பி. பூர்ணிமா, ஜி.வி. நாகவள்ளி பிரபாகரன், அமுதா பொன்னிவளவன் ஸ்ரீதணி, வட்டச் செயலாளர்கள் பவுல்ராஜ், எஸ். முருகன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.