
அந்தக்காலத்தில் வீட்டில் மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் ஆகவில்லை திருமணதடை உள்ளது என்றால் இந்த மரப்பாச்சி பொம்மையை வைத்து பொம்மை கல்யாணம் என்றுசெய்து தெரிந்தவர்களை அழைத்து சாப்பாடு போடுவார்கள் அன்னதானத்தைவிட சிறந்த தானம் இல்லை.ஆகையால்
பொம்மைக்கல்யாணம் மூலம் அன்னதானம் செய்வதன் பலன் உடனே திருமணம் கை கூடும். அதை அடியேன் பார்த்திருக்கிறேன்.
சரி திருமணம் ஆகிவிட்டது.பெண்னுக்கு சீர் கொடுக்கும்போது மரப்பாச்சி பொம்மைகள் வைப்பார்கள். காரணம்
அந்தப்பெண் அந்த பொம்மைகளையே
தன் தாய் தந்தையாக நினைத்து அவர்கள் கூட இருப்பதாக உணர்வாள்
காரணம் அந்தக்காலத்தில் போட்டோக்கள் கிடையாது.
சரி குழந்தை பிறந்துவிட்டது
அந்த குழந்தைக்கு ஜலதோஷம் பிடித்தால் மரப்பாச்சி பொம்மையை சந்தணக்கல்லில் வைத்து தேய்த்து அதை தாய்ப்பாலில் குழைத்து விளக்கில் சூடு காட்டி அதை நெற்றியில் பத்து போட்டால் ஜலதோஷம் நீங்கி குழந்தை அயர்ந்து தூங்கும்.பெரியவர்களுக்கு கட்டி வந்தால் கூட இது போல் தேய்த்து
கட்டி மேல் தடவுவார்கள்.
சரி குழந்தை வளர்ந்து பல்லால் கடிக்கும்நிலை வரும் போது பல மருத்துவ குணங்கள் உள்ள பல்வேறு மரங்களால் ஆன மரப்பாச்சியை குழந்தையிடம் விளையாடக்கொடுப்பார்கள்.அதை
குழந்தை கடிக்கும் போது அதன் மருத்துவகுணம் உள்ளே சென்று நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.
சரி அடுத்தது இனிமரப்பாச்சி பொம்மையை மற்றவர்களுக்கு பரிசாக
வாங்கிக்கொடுங்கள்.வீட்டில் அலங்காரப்பொருளாக அலமாரியில் வாங்கி வையுங்கள்.
கண்ணில் கிருக்கட்டி வந்தால் மரப்பாச்சி மை சந்தனக் கல்லில் இழைத்து போட்டால் சரியாகிவிடும்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?