வந்தவரை வரவேற்றல் தமிழர் மரபு.. வாழவைத்து வாழுவதே தமிழர் மரபு..
பிறப்பொக்கும் என்பதுவும் தமிழர் மரபு!
பேதமிலா சமுதாயம் நமது விழைவு!
பசியாற்றல் எவ்வுயிர்கும் தமிழர் மரபு.. வறுமையிலும் வழங்குவதே குல மரபு.!
ஈந்துவக்கும் தாய் தந்தை பேணுவது மரபு!
இனிய சொல்லும் இரக்கமுமே தமிழ் மரபு!
அயராது உழைப்பதுவே தமிழர் மரபு.. அனைத்துயிரும் உறவுயெனல் தமிழர் மரபு!
வரும் பகையை முடிப்பதுவம் நமது மரபு.
வாகை மலர் சூடுவதே தமிழர் மரபு!
பண்பாட்டுத் தேன் சுவை தந்த மரபு.. பாரில் உள்ள இனமெல்லாம் வியக்கும் மரபு..
காவியமாய் நிலைத்திருக்கும் கவி மரபு.. காலமதை வென்றதுதான் தமிழர் மரபு!
வே.கல்யாண்குமார்*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%