நீலமேக கண்ணின்
குழலில் சூட்டிய அதிசயமாக
மிளர்ந்தது - மயிர்பீலி
வானத்தின் நீலம்
பூமியைத் தொட முயல...
வீழ்ந்தது - மயிலிறகு
வட்டமிட்ட ஒளியில்
பக்தியின் ரகசியம்
உரைக்கும் கண்ணனின் மயிர்பீலி
மழையின் மந்திரத்தில்
சப்தங்கள் நிசப்தங்களாகி
உதிர்ந்த இயற்கை
மயிலிறகு
அகங்காரம் அகன்று
அலங்கார அழகு மலர...
எளிமையிலே மாயைச்
செய்யும் மாயனின் மயிற்பீலி...
காயப்பட்ட இதயத்தில்
அமைதியின் அருவமாய்
மனக்கடலை இதமாக
சுகமாக வருடும் மயிலிறகு...
மயிற்பீலி... மயிலிறகு...
பொருள் ஒன்றே
உணர்ச்சிகள் வேறு
மனிதனோடு...
இறைவன் பேசினால் - மயிர்பீலி
இயற்கை பேசினால் - மயிலிறகு
நா.பத்மாவதி
கொரட்டூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%