
" ஸ்ரீ மலையாளத்து சுடலை மகாராஜா திருக்கோவில் 35ம் ஆண்டு ஆடிக்கொடை திருவிழாவை முன்னிட்டு,
வெள்ளிக்கிழமை அதிகாலையில் பரிவார தெய்வங்களுக்கு மகா கணபதி ஹோமம் மற்றும் வேள்வி பூஜைகள் நடைபெற்றது.மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பெண்கள் கும்மி பாடலுக்கு கும்மியடித்து முளைப்பாரி நகர்வலம் வந்தனர்.மேலும் சுடலை மாடன் - பேச்சியம்மன் சொற்பொழிவு நடைபெற்றது.
மகுடம் தட்டி கணியான் வாசிப்புடன் சுவாமிக்கு மயானம் செல்ல அருள் புரிந்தார்.
நள்ளிரவு 2 மணியளவில் செண்டை மேளம் முழங்க, வான வேடிக்கையுடன் சுடலை மகாராஜா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சுவாமி மயான வேட்டைக்கு சென்று வந்தார். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீ சங்கர் சுவாமி செய்திருந்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?