போதைப்பொருள் கடத்தல் கப்பலை தாக்கிய அமெரிக்க ராணுவம்; 4 பேர் பலி
Dec 06 2025
22
வெனிசுலாவில் இருந்து பசிபிக் மற்றும் கரீபியன் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தும் சம்பவத்திற்கு எதிராக, 'ஆப்பரேஷன் சதர்ன் ஸ்பியர்' என்ற பெயரில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு நிர்வாகம் கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், கிழக்கு பசிபிக் கடல் வழியாக கப்பலில் போதைப்பொருள் கடத்தி வருவதாக அமெரிக்க ராணுவத்திற்கு உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட ராணுவத்தினர், போதைப் பொருள் கடத்தி வந்த கப்பலை கண்டறிந்து தாக்குதலை நடத்தியது. இதில், கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கொல்லப்பட்டனர்.
'ஆப்பரேஷன் சதர்ன் ஸ்பியர்' திட்டத்தின் கீழ், இந்தாண்டில் மட்டும் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் 20 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?