பைக் டாக்ஸிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் - கர்நாடக ஐகோர்ட் உத்தரவு!

பைக் டாக்ஸிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் - கர்நாடக ஐகோர்ட் உத்தரவு!


 

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள பைக் டாக்ஸி சேவைகளுக்கான தடையை அம்மாநில உயர் நீதிமன்றம் இன்று நீக்கி உத்தரவிட்டது. மேலும், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இருசக்கர வாகனங்களை போக்குவரத்து வாகனங்களாகப் பதிவு செய்து, அவற்றுக்கு ஒப்பந்த வாகனப் போக்குவரத்து அனுமதி வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


தலைமை நீதிபதி விபு பக்ரு மற்றும் நீதிபதி சி.எம். ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஓலா, ஊபர் மற்றும் ராபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீடுகள் மீது இன்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், கர்நாடகாவில் பைக் டாக்ஸிகள் இயக்கத்திற்கு அனுமதி அளித்ததுடன், சட்டப்பூர்வ அனுமதிகளுக்கு உட்பட்டு இருசக்கர வாகனங்களை போக்குவரத்து வாகனங்களாகப் பயன்படுத்தலாம் என்றும் தீர்ப்பளித்தது.


ராபிடோ, ஓலா மற்றும் உபேர் நிறுவனங்களின் பைக் டாக்ஸி சேவைகளை இயக்குவதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி தனி நீதிபதி தடை விதித்திருந்தார். இதனை எதிர்த்து அந்த நிறுவனங்கள் மேல்முறையீடு செய்திருந்தன.


தற்போது, ​​உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்ததுடன், நிறுவனங்கள் பைக் டாக்ஸி சேவைகளை வழங்க தற்போதைய விதிகளின் கீழ் உரிமம் வழங்குவதற்கு, கூடுதல் நிபந்தனைகளை விதிக்கவும் கர்நாடக அரசுக்கு சுதந்திரம் அளித்துள்ளது. மேலும், இருசக்கர வாகன உரிமையாளர்கள் மற்றும் பைக் டாக்ஸி நிறுவனங்கள் உரிமங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தற்போதுள்ள சட்டங்களின்படி அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


விண்ணப்பங்களின் அனைத்து தொடர்புடைய அம்சங்களையும் மாநில அரசு ஆராயலாம் என்றாலும், வாகனம் ஒரு மோட்டார் சைக்கிள் என்பதற்காக மட்டும் டாக்ஸி பதிவை மறுக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%