புதுச்சேரிக்கு கஞ்சா கடத்தி வந்தவர் கைது

புதுச்சேரிக்கு கஞ்சா கடத்தி வந்தவர் கைது


 

புதுச்சேரி: புதுச்சேரி, உருளையன்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு புதிய பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார்.


அவரை மடக்கி பிடித்து, அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 4 கிலோ கஞ்சா பொட்டலம் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.


 பின், அவரை ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், ஆந்திர மாநிலம், லட்சுமிபுரத்தைச் சேர்ந்த கையாரப்பு ராஜையா மகன் கையாரப்பு சதீஷ், 36; என்பது தெரியவந்தது.


தொடர்ந்து, அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%