புதிய உறவு

புதிய உறவு



         ராஜா - ரமா தம்பதியர் திருமணம் முடிந்து இருபது ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.


     இருவருமே நல்ல மனம் படைத்தவர்கள் . நிறைய சொத்தும், நல்ல வேலையால் அதிக சம்பளமும் இருந்தது.


             பல நல்ல காரியம் செய்து வந்தனர் இருவரும். ஏழைகளை படிக்க வைப்பது , ஆலய பணிக்கு பணம் கொடுப்பது என்று இருந்தனர்.


       ஒரு முறை தன் வீட்டுக்கு அருகில் வசித்த ஏழைப் பெண் விமலாவிற்கு திருமணம் தன் சொந்த செலவில் செய்து வைத்தனர் .


            விமலாவின் அப்பா அம்மா வயது மூப்பால் இறந்து போய் விட்டனர்.


       ராஜா - ரமா தம்பதியர் முதுமையால் அவதிப்பட்டனர் . உடன் உதவக் கூட ஆள் இல்லாமல் தவித்தார் .


     வெளி ஊரில் குடியிருந்த விமலா இந்த செய்தியை அறிந்து வருந்தினாள் , தன் கணவரிடம் இது பத்தி பேசினாள் . நல்ல மனிதர்களுக்கு உள்ளங்களுக்கு இறைவன் தான் துணை , நாம் ஏன் அந்த மாற்று மருந்தாக இருக்க கூடாது என்று தன் கணவன் ரவியிடம் கேட்டாள் .


     ரவி முழு சம்மதம் தெரிவிக்க விமலா உடன் புறப்பட்டு வந்து ராஜா - ரமா தம்பதியரை தன் வீட்டுக்கு அழைந்து வந்து விட்டாள் .


          ராஜா - ரமா தம்பதியர் பேரன் பேத்தி , அன்பு மகள் என புது குடும்ப உறவு கிடைக்க ஆகாயத்தில் இறக்கை முளைத்த பறவை போல் பறந்து கொண்டு இருந்தனர்.


      இறைவன் படைப்பில் யாரும் அனாதை இல்லை என்று அகம் மகிழ

சொல்லிக் கொண்டனர் இருவரும் .


- சீர்காழி. ஆர். சீதாராமன் .

- 9842371679 .

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%