பிறப்பு முதல் இறப்பு வரை கணிதம் அவசியம்: தேசிய கணித தின உரையரங்கில் பேச்சு
வந்தவாசியில் தேசிய கணித தின சிறப்பு உரையரங்கம் நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் தேசிய கணித தினத்தை முன்னிட்டு "அன்றாட வாழ்வில் கணிதம்" என்ற தலைப்பில் மாணவர்களுக்கான சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் சா.இரா. மணி முன்னிலை வகித்தார். பேராசிரியை சுதா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் சர்புதின் பங்கேற்று, "அன்றாட வாழ்வில் கணிதம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை கணிதம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய நவீன உலகில் கணிதமே கடவுள் என்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது. கணித மேதை ராமானுஜன் பிறந்தநாளே தேசிய கணித தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது என விவரித்து பேசினார். கணிதப் புதிர் விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இயக்குநர் விஜய் ஆதிநாதன் வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் ரெட் கிராஸ் உறுப்பினர் அ.ஷாகுல் அமீது நன்றி கூறினார்.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?