பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார்.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது. முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந் நிலையில், முதல்வர் பதவி ஏற்ற பின்னர் முதல்முறையாக 2 நாள் பயணமாக நேற்று முன் தினம் நிதிஷ்குமார் டெல்லி வந்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, மத்திய அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் (எ) லாலன் சிங் உடனிருந்தனர்.
பிரதமர் மோடி மற்றும் நிதிஷ் ஆகியோரின் தலைமையில், மாநிலத்தின் நலனையும் நல்லாட்சியையும் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு எக்ஸ் பதிவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?