பாவை கலைக் கல்லூரியில் ஆண்டாள் திருப்பாவை நிகழ்ச்சி

பாவை கலைக் கல்லூரியில் ஆண்டாள் திருப்பாவை நிகழ்ச்சி



நாமக்கல் புதுசத்திரம் பாவை மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்கழி மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் ‘பாவையில் பாவை -ஆண்டாள் சீருரை’ என்ற தலைப்பில் ஆண்டாள் திருப்பாவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், தலைவருமான என்.வி.நடராஜன் தலைமை வகித்தார். கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ரேவதி வரவேற்றார்.


பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் வாழ்த்துரை வழங்கிப் பேசினார். சிறப்புச் சொற்பொழிவாளராகப் பங்கேற்ற முனைவர் எழிலி விழாவில் பேசுகையில், ‘ஆண்டாளின் திருப்பாவை மரபினை போற்றும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த நிகழ்ச்சியின் மூலம் மார்கழி நோன்பின் தத்துவம், ஆண்டாளின் பக்தி பாரம்பரியம், நம் வரலாற்றில் பெண்களின் ஆன்மீகப் பங்கு போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். எனவே கலாச்சாரப் பண்புகளை நீங்கள் அறிந்து கொண்டு, உங்கள் குணநலன்களை நெறிப்படுத்த இந்த நிகழ்ச்சி உதவியாக அமையும்.


தமிழ் பக்தி இலக்கியத்தில் தனித்துவமான இடம் பெற்றுள்ள ஆண்டாள், திருப்பாவை மூலம் உலகெங்கும் பக்தி மற்றும் வாழ்வியல் நெறிகளைப் பரப்பியவர்.


மார்கழி மாதம் முழுவதும் பாடப்படும் திருப்பாவை பாசுரங்கள் இறைநம்பிக்கை, ஒழுக்கம், சமூக ஒற்றுமையை வலியுறுத்துகின்றன.


அதேபோல் மாணவிகளாகிய நீங்களும், சீரிய ஒழுக்கத்தோடு நற் செயல்களில் வைராக்கியமாக திகழும் போது, உங்களின் வாழ்க்கையும் சிறப்பாக அமையும் என்று பேசினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%