பழைய காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் கார்த்திகை சோமவார வழிபாடு!
வேலூர் மாவட்டம் பழைய காட்பாடி பெருமாள் கோயில் வீதியில் ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் பூதேவி ஸ்ரீதேவி சமேதரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் நவம்பர் 17ஆம் தேதி கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு கார்த்திகை சோமவார வழிபாடு நடந்தது. கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்ரீ வரதராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து அவருக்கு வெள்ளிக் காப்பு மற்றும் மலர் அலங்காரம், பட்டு வஸ்திரத்தில் சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஸ்ரீ வரதராஜ பெருமாளை தரிசனம் செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேலூர் தொரப்பாடி ஸ்ரீ பார்த்தசாரதி பட்டாச்சாரியார் விமரிசையாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?