
தமிழ் ஆசிரியர் ஒருவர் 'திருடர்கள்' என்ற தலைப்பில் எட்டாம் வகுப்பு மாணவர்களை கட்டுரை எழுதச்சொன்னார்.
ஒரு மாணவன் எழுதியிருந்த கட்டுரையைப் படித்துவிட்டு ஆசிரியர் மூர்ச்சித்து விழுந்து விட்டார். அவனது கட்டுரை வருமாறு:
திருடர்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்கு அளப்பரியது.
பாதுகாப்பு பெட்டகங்கள், பல்வேறு வகை பூட்டுகள் போன்றவை தயாரிக்க அவர்களே காரணமாயிருக்கிறார்கள். பெரும்பாலான தொழிற்சாலைகள் இவைகளை தயார் செய்வதற்கு காரணமாயிருக்கின்றனர்.
வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கல்லூரிகள், கடைகள் போன்றவை பாதுகாப்பாக இருக்க பெரிய பெரிய கிரில் கதவுகள், தாழ்ப்பாள்கள், பெரிய பெரிய பூட்டுகள், சிசி டிவி கேமராக்கள், மெட்டல் டிடெக்டர்கள், போன்றவை தயாரிக்கப்படுகின்றன. உயரமான சுவர்கள் எழுப்பப்படுகின்றன. இதன் மூலம் பல்வேறு தொழிலாளர்களின் குடும்பங்களில் அடுப்பு எரிய திருடர்கள் உதவியாக இருக்கிறார்கள்.
போலீஸ் அதிகாரிகள், காவல் துறை அலுவலர்க ஊழியர்கள், நீதிமன்ற ஊழியர்கள், நீதிபதிகள், வக்கீல்கள் முதலானோர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
பாதுகாப்பு தளவாடங்கள், சாலை தடுப்புகள், காவல் துறையினருக்கு இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் போன்றவை கொள்முதல் செய்ய காரணமாயிருக்கிறார்கள்.
சிறைகள், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சிறையில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோர் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள்
மொபைல் போன்கள், மடிக்கணினிகள், கார்கள், இரு சக்கர வாகனங்கள், மின் உபகரணங்கள் போன்றவை திருடப்படுவதால் அவை மீண்டும் மீண்டும் தயாரிக்க படுகின்றன. இதில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வர்த்தகம் உயர்கிறது.
திருடர்கள் மெல்ல மெல்ல உயர்ந்து அரசியலில் நுழைந்து பெரிய பெரிய திருட்டுக்களில் ஈடுபடுவதால் நாட்டின் பொருளாதாரம் மேன்மையடைகிறது.
ஆகவே திருடர்களை மட்டமாக காண்பிப்பது நியாயமற்றது.
மேற்கண்டவாறு அந்த மாணவன் எழுதி முடித்திருந்தான்
ஆசிரியர் மூர்ச்சை தெளிந்து எழுந்து அந்த மாணவனுக்கு 100 மதிப்பெண்கள் அளித்ததோடு மட்டுமல்லாமல் அம்மாணவனின் ஸ்காலர்ஷிப்புக்கும் ஏற்பாடு செய்தார்
டீ. என். பாலகிருஷ்ணன்
சென்னை 91
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?