சென்னை: டிட்வா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையினால் விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து சம்பா மற்றும் தாளடி பயிர்கள் அழுகி சேதமடைந்தன. பாதிக்கப் பட்ட விவசாயிகள் யாரும் விடுபடாத அளவிற்கு கணக்கெடுப்பு பணி நடத்தி டிச.12 ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக வேளாண் துணை இயக்கு நர் தெரிவித்துள்ளார். சென்னை வேளாண்மை துணை இயக்குநர் அறவாழி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூர், மாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை நேரடியாகப் பார்வையிட்டு சேத விபர கணக் கெடுப்பு பணியை ஆய்வு செய்தார். 59 வேளாண்மை உதவி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலு வலர்கள் இணைந்து பணியாற்றுவதாகவும் கூறினார். திருவாரூர் மாவட்டத்தில் 14 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பாதிப்பு இருப்பதால், புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து உதவி வேளாண் அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு கணக் கெடுப்பு பணி நடத்தப்படுவதாகவும், விவசாயி களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அனைத்து நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் வேளாண் துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?