நிலாவில் கவியரங்கம்

நிலாவில் கவியரங்கம்


ஒருநாள் நிலவே.. உன்னில் நடந்து ஊர்வலமாய் வருவேன்!


உழுது நீர்ப் பாய்ச்சி..

அறுவடைக் கதிரை தோளில் சுமந்திருப்பேன்!


இரு.. இரு.. உன்மேல் அமர்ந்து இரவினில் காதல் பாட்டிசைப்பேன்!


இறகுகள் விரித்து.. எழில் நிலவே உனை சுற்றி யான் குறள் படிப்பேன்!


வான வீதியில் விண்கலங்களை.. வரிசையாய் நிறுத்தி வைப்பேன்.!


வாருங்கள் பூமிக்கு சுற்றுலா போகலாம்! நிலாவில் பதாகை எழுதி வைப்பேன்.!


சந்திரன் எத்தனை வீட்டில் இருக்கிறான்? சோதிடம் பார்த்துரைப்பேன்!


வந்தவர் போனவர்.. யாவரும் கேட்கவே.. நிலாவில் கவியரங்கம் வைப்பேன்!


வே.கல்யாண்குமார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%