பெண்ணாடம் அருகே, 7 ஊராட்சிகளில் அமைச்சர் சி.வெ.கணேசன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பெண்ணாடம் அடுத்த வடகரை, கோனூர் தாழநல்லூர், பெ.பூவனூர், கீரனூர், காரையூர், தீவளூர் ஆகிய ஊராட்சியில் மக்கள் குறை தீர் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பெண்ணாடம் தி.மு.க., ஒன்றிய செயலாளர் செம்பையன் தலைமை தாங்கினார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மக்களின் குறைகளை கேட்டறிந்து, பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து வடகரை- நந்திமங்களம் - தாழநல்லூர் ஆகிய கிராமங்களில் சாலை, மற்றும் தெரு பகுதிகளை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார். அப்போது நல்லூர் பி.டி.ஓ., கொளஞ்சி, அனைத்து அரசு அலுவலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?