நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 127 திட்டப் பகுதிகளில் ரூ.73 கோடியில் தூய்மை, மேம்பாட்டு பணிகள்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 127 திட்டப் பகுதிகளில் ரூ.73 கோடியில் தூய்மை, மேம்பாட்டு பணிகள்


 

சென்னை: தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரி​யத்​தின் 127 திட்​டப் பகு​தி​களில் ரூ.72.73 கோடி​யில் உள்​கட்​டமைப்பு மேம்​பாடு மற்​றும் தூய்மைப் பணி​களை மாநக​ராட்சி மேற்​கொண்டு வரு​கிறது.


இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பு: மாநக​ராட்சி சார்​பில் தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய குடி​யிருப்​புப் பகு​தி​களில் தூய்மையாகப் பராமரிக்​கும் பணி​கள் மற்​றும் உட்​கட்​டமைப்பு மேம்​பாட்​டுப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.


இதன்​படி, நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரி​யத்​தின் 74 குடி​யிருப்​புப் பகு​தி​களில் ரூ.15.11 கோடி​யில் 15,039 மீட்​டர் நீள​முள்ள 37 தார்ச் சாலைகள், 11 பேவர் பிளாக் சாலைகள், 56 சிமென்ட் கான்​கிரீட் சாலைகள் என மொத்​தம் 104 சாலைகளில் மேம்​பாட்​டுப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.


மேலும் குடி​யிருப்​புப் பகு​தி​களுக்​குள் சமூக உள்​கட்​டமைப்பை வலுப்​படுத்த 37 குழந்​தைகள் மையங்​கள், 15 நியாய விலைக் கடைகள், 3 ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், ஓர் அம்மா உணவகம் மற்​றும் சுற்​றுச்​சுவர்​கள் ஆகிய​வற்​றில் ரூ.13.33 கோடி​யில் புதுப்​பித்​தல், பராமரிப்பு மற்​றும் கட்​டு​மானப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.


ஆரோக்​கிய​மான வாழ்க்கை மற்​றும் பொழுது​போக்கு வாய்ப்​பு​களை மேம்​படுத்த 9 பூங்​காக்​கள் மற்​றும் 2 விளை​யாட்டு மைதானங்​கள் ரூ.98.99 லட்​சத்​தில் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளன.


ரூ.10.85 கோடி​யில் 123 குடி​யிருப்​புப் பகு​தி​களில் மொத்​தம் 1,476 விளக்கு கம்​பங்​கள், 9 உயர் கோபுர மின்​விளக்​கு​கள், 2,782 எல்​இடி விளக்​கு​கள் அமைக்​கும் பணி​கள் நடை​பெறு​கின்​றன.


மேலும் ரூ.32.45 கோடி​யில் 173 குடி​யிருப்​புப் பகு​தி​களில் 1,22,014 குடி​யிருப்​பு​கள் பயனடை​யும் வகை​யில் திடக்​கழிவு மேலாண்மை நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன. 1,325 தூய்மைப் பணி​யாளர்​கள் இப்​பணி​யில் உள்​ளனர். 406 குப்​பைத் தொட்​டிகள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் கூறப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%