சென்னை, ஜன. – சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் 150 நாட்களுக்கும் மேலாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அம்பத்தூரில் போராடி வந்த 5 மற்றும் 6-வது மண்டலப் பணியாளர்களை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். “இந்த மாத இறுதிக்குள் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சியின் கீழ் அதிகாரப்பூர்வமாகப் பணியமர்த்தப்படுவார்கள். இந்தப் பொங்கல் அவர்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக அமையும்” என அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?