திருவள்ளூர், ஜன.
கும்மிடிப்பூண்டி யோகா பயிற்சி மையத்தை சேர்ந்த மாண வர்கள், தொடர்ந்து 10 நிமிடங்கள் பரிவர்த்த ஜானு சிரசாசனம் எனும் யோகாசனம் செய்து நோபல் உலக சாதனை படைத்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையம் மற்றும் இந்தியன் யோகா அசோசியேஷன் அமைப்பின் தமிழ்நாடு பிரிவு இணைந்து, யோகா உலக சாதனை நிகழ்வை நடத்தினர். கும்மிடிப்பூண்டி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சிவகுமார் தலைமையில் நடந்த நிகழ்வில், இந்திய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பின் தேசிய செய லாளர் டாக்டர் அரவிந்த் லட்சுமி நாராயணன் சிறப்பு அழைப்பாள ராக பங்கேற்றார். ஸ்ரீ சங்கரி யோகா மையத்தின் நிறுவனர் சந்தியா, நோபல் உலக சாதனை தீர்ப்பாளர் பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் போது, யோகா மையத்தை சேர்ந்த, 90 மாணவர்கள், தொடர்ந்து, 10 நிமிடங்கள், பரிவர்த்த ஜானு சிரசாசனம் எனும் யோகாசனம் செய்து புதிய உலக சாதனை படைத்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?