சென்னை,
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தில் பேசிய துணை பேரவைத் தலைவர் பிச்சாண்டி, கீழ்பொண்ணாத்தூர் தொகுதியில் ஒரு போக்குவரத்து பணிமணை அமைக்க வேண்டும் என்றும், திருவண்ணாமலைக்கு அதிக பக்தர்கள் வருவதால், உதான் திட்டத்தின் கீழ் ஒரு விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், “நிதி ஆதாரத்தை சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாடு செய்தால் பணிமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விமான நிலைத்தை பொறுத்த வரையில் புரியாத புதிராக உள்ளது. அவருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதில் அளித்தார்.
இந்த நிலையில் சட்டசபை கேள்வி நேரத்தின்போது, குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், கும்பகோணத்தில் நவகிரக சுற்றுலா பேருந்து மற்றும் சென்னையில் 'சென்னை உலா' சுற்றுலா பேருந்து வசதி ஆகியவை தொடங்கப்பட்டுள்ளது. இது போன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.
நாளை ம.நீ.ம. செயற்குழு கூட்டம் - கமல்ஹாசன் அறிவிப்பு
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் வௌக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நமது தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தலைமையில் வருகிற ஜனவரி 24-ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிரார்கள்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?