திருச்சி நீதிமன்றத்தில் 57,000 வழக்குகள் நிலுவை மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்
Dec 15 2025
15
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பிரபு வரவேற்றார். மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்து, சமரச தீர்வு அடிப்படையில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து வழக்கினை தீர்வு கண்டு, அதற்கான ஆணையை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், “திருச்சி நீதிமன்றத்தில் 57,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்னும் புதிதாக வழக்குகள் தொடரப்படும். இந்த வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால், நீண்ட காலம் ஆகும். இந்த வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரச தீர்வு அடிப்படையில் தீர்வு கண்டால் மக்கள் பயனடையலாம். இந்த அரிய வாய்ப்பினை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார். தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வில், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?