திட்டக்குடியில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் திடீர் ஆய்வு

திட்டக்குடியில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் திடீர் ஆய்வு



* திட்டக்குடி நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஆய்வு செய்தார். 


* புகார் மனு கொடுக்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


* பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் கொடுக்காமல் ரகசியம் காத்தனர்.


கடலூர், டிச.23-


கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் பல்வேறு திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் முறைகேடுகள் நடப்பதாக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து நேற்று நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் திட்டக்குடியில் 2 மணி நேரம் திடீர் ஆய்வு செய்தார், திட்டக்குடி பஸ் நிலையத்தில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் பணி, பலகோடி புதிய மார்க்கெட், புதிதாக கடை கட்டிடங்கள் கட்டுமானப்பணி, பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு பல்வேறு பணிகளின் நிலை குறித்து பார்வையிட்டார்.

நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை ஆய்வு செய்து பணிகள் தரமான முறையில் மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். இந்த பணிகள் தாமதம் இல்லாமல் குறித்த நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


திட்டக்குடி நகராட்சி ஆணையர் முரளிதரன், நகராட்சி பொறியாளர் அதிகாரிகள் உள்பட பலர் உடன் சென்றனர். நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரின் ஆய்வு குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு முன்னதாக தகவல் அளிக்கப்பட்டும், அவரது வருகை சம்பந்தமாக பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் கொடுக்காமல் ரகசியம் காத்தனர்.

மேலும் நகராட்சி நிர்வாகம் சம்பந்தமாக புகார் மனு அளிக்கவும், புகார்களை தெரிவிக்கவும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் நகராட்சிக்கு வந்திருந்தனர். ஆனால் நிர்வாக இயக்குனர் ஆய்வை முடித்துக் கொண்டு திரும்பி விட்டதால் அவரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%