
கோடை சீசன். தர்பூசணி பழங்கள் கொட்டிக் கிடக்கிறது. விற்பனைக்குத்தான்!
நல்ல பழுத்த பழம் வாங்கி நறுக்கி விதை நீக்கி பழம் உண்டபின் சதைப்பற்றுடன் இருக்கும் மேல்பாகத்தை நன்கு தோல் சீவி பொடித்துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
தேவைக்கேற்ப சாதம் வைக்கும்போதே கூட்டு செய்வதற்கு துவரம் பருப்பு வேகவைத்து மசித்து கொள்ளவும்.
ஒரு குக்கரில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பிடித்தால் சிறிது கடலை பருப்பு, சீரகம், வாசனைக்கு இரண்டு வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து கொள்ளவும்.
பிறகு நறுக்கிய துண்டுகள் சேர்த்து நன்கு கலந்து கொடுக்கவும். பிறகு காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடிவைத்து இரண்டு மூன்று விசில் விடவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேவைக்கேற்ப கல் உப்பு, பச்சை மிளகாய், தேங்காய், ஒரு துண்டு இஞ்சி சேர்த்து நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.
அரைக்கும்போது தேவையானால் ஒரு ஸ்பூன் நீர் சேர்த்துக் கொள்ளலாம்.
குக்கர் திறந்த பின்பு கிளறி கொடுக்கவும். அரைத்த விழுதினை சேர்த்து ஒரு கொதி விடவும்.
பின்னர் மசித்து வைத்த துவரம் பருப்பு சேர்த்து தேவைக்கேற்ப நீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
சாதத்துடன் நெய் ஊற்றி சாப்பிட சுவையும் மணமும் நிறைந்திருக்கும்.
சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள 'ஏ ஒன்' ஆக இருக்கும். நீங்களும் செஞ்சு அசத்துங்க.
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?