தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பில் 32 புதிய தமிழ்ச் சொற்கள் சேர்ப்பு

தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பில் 32 புதிய தமிழ்ச் சொற்கள் சேர்ப்பு

தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பில் 32 புதிய தமிழ்ச் சொற்கள் சேர்ப்பு

தமிழ் வளர்ச்சிக் கழக தலைவர் ம.ராசேந்திரன் தகவல்


சென்னை, 


தமிழ் மொழியின் சொல்வளத்தை காலத்திற்கேற்ப மேம்படுத்தும் நோக்கில், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ‘தமிழ் வழக்குச் சொல்’ திட்டத்தின் 8 வது தொகுதியாக 32 ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.


தமிழ் வளர்ச்சிக் கழகம் செயல்படுத்தி வரும் தமிழ் வழக்குச் சொல் திட்டத்தின் மூலம், ஆங்கிலத்தில் வழக்கிலுள்ள பல்வேறு சமகாலச் சொற்களுக்கு எளிமையான, பொருத்தமான தமிழ்ச் சொற்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.


அதன் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ள 8 வது தொகுப்பில் 32 புதிய சொற்கள் இடம்பெற்றுள்ளன என தமிழ் வளர்ச்சிக் கழக தலைவர் ம.ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.


புதிய சொற்கள்:


அதில் Life writing – வாழ்வெழுத்து, Poop suitcase – மலம் தாங்கும் பெட்டி, Fibonacci day – பிபோனாச்சி நாள், Culpable homicide – நோக்கமில்லா கொலை, Rage bait – கெடு உணர்வு தூண்டி, Reps – மீள் பயிற்சி, Microgreens – நுண்ணுயிர் பயிர், Quandary – ஊசலாட்டம், Conundrum – பெரும் சிக்கல், Strong room – காப்பறை ஆகிய சொற்கள் அடங்குகின்றன.


மேலும் Collagen – தசை வலுவூட்டும்/ தசை நார் வலுவூட்டி, Match fixing – ஆட்டச் சூது, Sky ball – மீவுயர் பந்து, Skyfall – பெருவீழ்ச்சி, Yorker –குறி வீச்சுப் பந்து, Abnegation – தன்னல நீக்கம், Athleisure – விளையாட்டுப் பாணி உடை, Facetious – பொருந்தா நகைச்சுவை, Iconoclast – கலகக்காரர், Physical flashcard – விளக்க அச்சு அட்டை, Digital flashcard – விளக்க மின் அட்டை உள்ளிட்ட சொற்களும் இடம் பெற்றுள்ளன.


இதுதவிர Gigil – பேருணர்வு, Alamak – ஐயோ, Yoh – ஓ, Ludraman மட்டி, Tumbleweed – மரக்கட்டை, Hidden gem – மறைமணி, Dowdy – ஈர்ப்பற்ற, Kidult – முதிர்குழந்தை/முதுகுழவி Hangxiety – போதை பின் பதற்றம், Promptcraft – கட்டளை திறன்/ கட்டளைக் கலை, Situationship – உறவு மயக்கம் போன்ற தமிழ்ச்சொற்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.


தமிழ் மொழியை நவீன வாழ்க்கைச் சூழலுடன் இணைத்து வளர்த்தெடுக்கும் நோக்கில் இத்தகைய சொல் தொகுப்புகள் தொடர்ந்து வெளியிடப்படும் என தமிழ் வளர்ச்சிக் கழக தலைவர் ம. ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.


இந்தச் சொல் தொகுப்புத் தயாரிப்பில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் முனைவர் மா. இராசேந்திரன் தலைமையில், பொறுப்பாளர்கள் வ. ஜெயதேவன், மு. இராமசாமி, ஒப்பிலா மதிவாணன், பாரதிபாலன், சா. சரவணன், ம. இளங்கோவன், பூண்டிக் கல்லூரி முன்னாள் முதல்வர் உ. இராசேந்திரன் மற்றும் திருமதி வாசுகி கண்ணப்பன், நீரை மகேந்திரன், ராஜ் கண்ணன், மு. முருகேசன், ஆகியோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%