எப்போதும் நினைவுதான்

எப்போதும் நினைவுதான்


காலை முதல் மாலை வரை உன் நினைவுதான்,

 நேரமும் நாட்களும் நகர்ந்தாலும் உன் நினைவு நகர்வதில்லை

மூடிய விழிகளுக்குள் உன் நினைவு தான் 

தென்றல் வந்து தழுவினாலும் தெரியாத உன் நினைவு தான்

இரவும் பகலும் மாறி மாறி வந்தாலும் உன் நினைவு மாறுவதில்லை

உறக்கம் இல்லை என்பதால் கனவும் இல்லை உன் நினைவு மட்டுமே உண்டு

உள்ளத்திற்கு உற்சாகம் தருவது உன் நினைவு மட்டுமே

விடிய விடிய உன் நினைவுடன் மஞ்சத்தில் இருப்பது தான் உண்மை 

மறக்க விரும்பாமல் இருக்கும் வரை உன் நினைவுடன் இருப்பேன் 

உன் நினைவு அதில் தருவது இன்பமும் செல்வது துன்பம் 


உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%